கிளப்பும் மழை… தெற்கு,மேற்கு தமிழகத்திற்கு அற்புதமான நாள்- தமிழ்நாடு வெதர்மேன்..!

Estimated read time 0 min read

சென்னை:

தமிழகத்தில் கோடை மழை கொட்டத் தொடங்கியுள்ள நிலையில் தெற்கு மேற்கு தமிழகத்திற்கு அற்புதமான நாளாக அமைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் பெய்யும். பிப்ரவரி முதலே வெயில் காலம் ஆரம்பித்து விடும். இந்த ஆண்டு பருவமழை அபரிமிதமாகவே பெய்தது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இம்முறை பனிக்காலம் சற்று அதிகமாகவே இருந்தது. பிப்ரவரியில் கூட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பனி சூழ்ந்திருந்தது. மனிதர்களால் மழை, பனியைக் கூட தாங்கி கொள்ள முடியும். வெப்பத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது. பலரும் குளிர் பிரதேசங்களை நாடி செல்லத் தொடங்கினர்.

ஏப்ரலில் கோடை மழை

மார்ச் மாதம் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு கோடை மழை சற்று அதிகமாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முன்பே கூறியிருந்தார். அவர் கணித்து வெளியிட்டது போலவே தற்போது கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென்கேரளா குமரியில் மழை

நேற்றைய தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெதர்மேன் வெளியிட்ட அறிவிப்பில், பெரும்பாலான தென் தமிழ்நாடு மற்றும் தென் கேரளா மாவட்டங்கள் தொடர்ந்து மழை பெய்யும் ஆனால் தென்கிழக்கு கடற்கரையில் யூஏசி டெல்டா கடற்கரை அருகே கனமழை பெய்யக்கூடும். நாகை, கடலூர், மயிலாடத்துறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெப்ப மழை. தென் கேரளா / குமரியில் நல்ல மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தார். உள், தென் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். கேரளா மற்றும் தென் தமிழகத்திற்கு சிறந்த நாட்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மூன்று நாட்கள் மழை

திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரைக்கும் அடுத்த மூன்று தினங்களில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் வழியாக கேரள கடற்கரைக்கு செல்லும் என்பதால் தென் கேரளா மற்றும் தென் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நகர்ந்த இதே போன்ற ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையை என்னால் நினைவு கூர முடிகிறது என்று பதிவிட்டிருந்தார்

5 நாட்களுக்கு எங்கெங்கு கனமழை

வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், சிவப்பு பொட்டு மதுரையிலே சற்று முன் காணப்பட்டது. உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சி நோக்கி பெருத்த புயல் நகர்ந்தது. தென் மற்றும் மேற்கு தமிழகத்திற்கு மற்றொரு அற்புதமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போக்கு அடுத்த 5 நாட்களுக்கு தொடரும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, விருதுநகர், மதுரை ஆகிய தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோடை மழையை ரசிக்கட்டும்

தென் மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பார்த்து சென்னைவாசிகள் வருத்தப்படுகின்றனர். நமக்கு எப்போது கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் 34 முதல் 35 டிகி செல்சியஸ் வெப்பம் தொடரும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். சென்னையில் மழைக்கான நேரமில்லை என்றும் வறண்ட பகுதிகள் கோடை மழையை ரசிக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours