அமெரிக்கா:
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார். ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்ற உள்ள மூன்றாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார். ஆனால் முதல் கறுப்பினப் பெண்.
கறுப்பினத்தவர்களில் முதன்முறையாக துர்குட் மார்ஷல் என்பவர் 1967 முதல் 1991 வரை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அவரை தொடர்ந்து கிளேரன்ஸ் தாமஸ் பதவி வகித்தார்.
கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்
என்பவரை நீதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours