ரஷ்ய:
ரஷ்ய மீனவர் ஒருவர் கடலின் ஆழத்தில் ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார், அதை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இந்த உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிராகன் போன்ற உயிரினம் அது. கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உயிரினம் இதற்கு முன் பார்த்திராத ஒன்று. அது என்ன தெரியுமா?
இது சிமேரா அதாவது குருத்தெலும்பு மீன் வகை. இது பேய் சுறா என்றும் அழைக்கப்படுகிறது. ரோமன் என்ற ரஷ்ய மீனவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த புதிய உயிரினத்தை ‘பேபி டிராகன்‘ என்று சமூக ஊடகத்தில் மக்கள் அழைக்கின்றனர். 39 வயதான ரோமன் என்ற ரஷ்ய மீனவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தார், அவரது வலையில் சிக்கியது இந்த புதிய உயிரினம்.
இந்த புகைபடத்தில் நீங்கள் பார்ப்பது புதிய வகை உயிரினம், புதிதாக குஞ்சு பொரித்த முட்டையிலிருந்து ஒரு டிராகன் குட்டி வெளியே வந்தது போல் இந்த உயிரினம் தெரிகிறது..
தொடக்கத்தில் இது பற்றி எந்த தகவலும் இல்லை, ஆனால் இப்போது மெதுவாக இந்த மர்மம் தீர்க்கப்படுகிறது.
இது சிமேரா, அதாவது குருத்தெலும்பு மீன் வகை என்று கூறப்படுகிறது. இது பேய் சுறா என்றும் அழைக்கப்படுகிறது. ரோமன் இந்த புதிய உயிரினத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை பலரும் மிகவும் அதிக அளவில் பகிர்ந்தனர்,
புதிய உயிரினத்தைப் பற்றி அனைவரும் அறிய விரும்பினர். இந்த மீன் பெரிய கண்கள், நீண்ட வால் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதன் உடலில் இறகு போன்ற ஒன்று உள்ளது. அதனால் அது பேபி டிராகன் என்று அழைக்கப்பட்டது.
இதை பார்த்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். யாராவது ஆச்சரியப்பட்டால், அதன் தோற்றத்தை ஜீரணிக்க முடியாமல் சிலர் இருக்கிறார்கள். ஏனென்றால் முதல் பார்வையில் இது என்னவென்று உங்களால் புரிந்து கொள்ள முடியாது?
+ There are no comments
Add yours