அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு இணைய செய்தி ஊடக கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துக்கள், எதற்காக இந்த அமைப்பு அவசியம் என நீங்கள் கேட்கலாம் அந்த கேள்விக்கான பதில் தான் இது, இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மக்கள் அனைவரும் உலக நடப்புகளை அறிய அதிகம் பயன்படுத்துவது இணையம் மட்டுமே.
எனவே மற்ற ஊடகங்களை காட்டிலும் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் சிறப்பான பணியை செய்வது இணைய செய்தி நிறுவனங்கள் மட்டுமே.
ஆனால் அரசு துறை அலுவலர்கள் இணைய செய்தி ஊடக செய்தியாளர்களை புறக்கணிப்பது வாடிக்கையாகி வருகிறது, இதனை தடுக்கவும், இணைய செய்தி நிறுவன செய்தியாளர்களையும் மற்ற செய்தியாளர்களை போல அங்கீகரித்து அடையாள அட்டை, நலவாரிய உதவிகள் போன்றவை கிடைக்க தேவையான முயற்சிகளை எடுக்கவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும், அனைவரையும் நம்முடன் இணைத்து செயல்பட்டு நமது தார்மீக உரிமைகளை பெறுவது ஒன்றே நமது இலக்கு. மேலும் இணைய செய்தி ஊடகங்களின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் உதவுகளும் வழங்கப்படும்.
உங்களுக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அழைக்கவும்.
வினோத்குமார் ஆதிமூலம்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் – TNFINM,
Mob: 9843663662
+ There are no comments
Add yours