மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் (26) ஜைன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சத்யா நாதெல்லா. இவருக்கு ஜைன் என்ற மகன் இருக்கிறார். பிறக்கும்போதே, பெருமூளைவாத நோயால் பாதிக்கபட்டிருந்தவர், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இமெயில் மூலம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மெயிலில், நாதெல்லா குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடமளிக்குமாறும், பிரார்த்தனைகளில் அவர்களை நினைவுகூறமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours