Facebook – Google HACK : எச்சரிக்கை! உங்கள் பேஸ்புக், கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்; தவிர்ப்பது எப்படி..!

Estimated read time 1 min read

இன்டர்நெட் யுகத்தில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்ய புதிய வைரஸ் பயன்படுத்தப்படுவதாக அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்த வைரஸ் மூலம் பேஸ்புக்குடன், கூகுள் கணக்குகளையும் ஹேக் செய்யப்படலாம் என அச்சுறுத்தல் உள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்….

சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ்

எலக்ட்ரான் பாட் (Electron-bot) என்னும் ஒரு புதிய மால்வேர் அதாவது தீம்பொருள், மூலம் சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாக, செக் பாயிண்ட் ரிசர்ச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த வைரஸ் மூலம் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மால்வேர் வேலை செய்யும் விதம்

FILE PHOTO: A Facebook logo is displayed on a smartphone in this illustration taken January 6, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

இந்த வைரஸ் உங்கள் கணக்குகளை எவ்வாறு தாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதனை எளிதாக தவிர்க்கலாம். நீங்கள் தொலைபேசியில் பயன்படுத்தும் சில செயலிகள் மூலம் உங்கள் கணக்குகளை அணுகுவது மிகவும் எளிது. இந்த வைரஸ் டெம்பிள் ரன் (Temple Run ) மற்றும் சப்வே சர்ஃபர்ஸ் (Subway Surfers) போன்ற கேம் செயலிகளின் உதவியுடன் பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கான அணுகலைப் பெறுகிறது.

சில குறிப்பிட்ட கேம் ஆப்ஸ் உண்மையில் கேம்களுக்கான ஆப்ஸ் அல்ல என்பது குறீப்பிடத்தக்கது. உண்மையில் இந்த செயலிகள் குளோன்கள் மட்டுமே, இதன் மூலம் ஹேக்கர்கள் இந்த எலக்ட்ரான் போட் என்ற மால்வேர் மூலம் பயனர்களின் கணக்குகளை ஜேக் செய்யலாம்.

எலக்ட்ரான் போட் வேலை செய்யும் விதம்

எலக்ட்ரான் போட் என்னும் தீம் பொருள், உங்கள் கணினியைக் கட்டுப்படுத்துவதோடு, உங்கள் Facebook மற்றும் Google கணக்குத் தகவல்களையும் அணுகுகிறது. இந்த தீம்பொருளின் உதவியுடன், ஹேக்கர் பயனரின் சாதனத்தில் ஒரு புதிய கணக்கைப் பதிவு செய்து, பின்னர் பயனரின் சமூக ஊடகத்தை ஹேக் செய்கிறார்கள். இந்த வைரஸ் கூகுளின் ஆல்பம்ஸ் செயலியான கூகுள் போட்டோஸில் காணப்பட்டது.

இந்த வகை வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க, உங்கள் மொபைலில் வைரஸ் எதிர்ப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்ய மறக்காதீர்கள். அதோடு ஸ்மார்ட்ஃபோனுக்குள் வைரஸ் நுழையக்கூடிய எந்த மூன்றாம் தரப்பு செயலிகளையும் பதிவிறக்க வேண்டாம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours