ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால் பெலாரசில் வேண்டாம் – அதிபர் செலன்ஸ்கி..!

Estimated read time 1 min read

உக்ரைன்,

உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.  ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான  ராணுவ நடவடிக்கையை  விரிவு படுத்த  புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என  தெரிவித்து இருந்தது. பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷியா தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ்  பயன்படுத்தப்படுவதால் பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours