பிரிட்டனின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் (Johnson & Johnson) பேபி பவுடர் விற்பனை உலகம் முழுவதும் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது, அந்நிறுவனம் ஏற்கனவே 2020ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டது. புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனை தொடர்பாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது 34,000 வழக்குகள் உள்ளன. அந்த நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்திய பின்னர், கருப்பை புற்றுநோய் (Cancer Disease) வந்ததாக பல பெண்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் தீங்கு ஏதும் இல்லை என்று நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. வட அமெரிக்காவில் விற்பனை குறைந்து வருவதால் தான் விற்பனையை நிறுத்தியதாகவும் நிறுவனம் கூறுகிறது.
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஜான்சன் அண்ட் ஜான்சனின் 2 இந்திய தயாரிப்பு கூடங்களில், குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.
உலகம் முழுவதும் அதன் விற்பனையை தடை செய்ய தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட முதலீட்டு தளமான Tulipshare இந்த தகவலை வழங்கியுள்ளது. இதற்கான முன்மொழிவு US Securities and Exchange Committee (SEC) என்ற அமெரிக்க பங்கு சந்தை கமிட்டிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடக்கவிருக்கும் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு முன் இந்த தடையை விதிக்கலாமா என்வும் பங்கு சந்தை கமிட்டியிடம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தடை செய்யும் தீர்மானம் செல்லாததாகக் கருதப்பட வேண்டும் என்று நிறுவனம் அமெரிக்க கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜான்சன் & ஜான்சன் ஏற்கனவே, பல வழக்குகளில், உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்களை இழப்பீடாக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours