தமிழகத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி..?

Estimated read time 1 min read

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அனுமதி
பால், பத்திரிகை, மருத்துவம், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி
குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் இயங்க அனுமதி.
வெளியூரில் இருந்து தொலைத்தூர பஸ்கள், ரெயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகார்கள் நிபந்தனைகளுடன் இயங்க போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடகை வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி.
நேர்முகத் தேர்வுக்கு செல்வோருக்கு அனுமதி, எனினும்,அவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.
முழு ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், திருமண அழைப்பிதழை வாகன சோதனையில் காண்பித்து விட்டு செல்லலாம்
தடை
மாநகர பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் இயங்காது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், ‘டாஸ்மாக்’ கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படாது.
அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மேலும்  கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours