“ஷூட்டிங் ஸ்பாட்டுல சாப்பிடறதுல பிரச்னை; `கயல்’ சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க!” – நடிகர் பிர்லா போஸ் இப்படிப் பேசியிருந்த பேட்டி சில தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

“‘கயல்’ சீரியலில் தன்னிடம் எதுவும் சொல்லாமலே தன் கேரக்டரில் வேறொரு நடிகரைக் கமிட் செய்து விட்டார்கள்” என்ற பிர்லா போஸ், சீரியலின் யூனிட்டில் நடந்த வேறு சில பிரச்னைகள் குறித்தும் அந்தப் பேட்டியில் பேசியிருந்தார்.

“பிர்லா போஸின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த விளக்கம் தர விரும்புகிறோம்” எனத் தொடரின் இயக்குநர் செல்வம் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இயக்குநர் செல்வம்

“பிர்லா போஸும் நானும் பரஸ்பரம் ரொம்பவே அறிமுகம் இருக்கிறவங்கதான். நான் இயக்கிய ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட சில சீரியல்கள்ல அவர் ஏற்கெனவே நடிச்சிருக்கார். ‘கயல்’ தொடர்ல வஜ்ரவேல்ங்கிற அந்த போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு இவர் பண்ணினா சரியா இருக்கும்னு நானேதான் அவர்கிட்டப் பேசினேன்.

சீரியல் ஷூட்டிங்கைப் பொறுத்த வரை ஷூட்டிங் ஷெட்யூல் ரொம்ப முக்கியமானது. அவர் நடிச்சிட்டிருந்த போது ரெண்டு சம்பவம் நடந்தது.

முதல்ல ஒரு நாள் சீரியல் ஷூட் நடந்துட்டிருந்த போதே சாயங்காலம் ரெண்டு மணி நேரம் அவருக்கு வேறொரு ஷூட்டிங் போக வேண்டியிருந்திருக்கு. அதை எங்கிட்ட அப்படியே சொல்லியிருந்தா நானே அதுக்கேத்தபடி ஷூட்டிங்கை மாத்தி அவரைப் போக வச்சிருப்பேன்.

ஆனா உண்மையான அந்தக் காரணத்தைச் சொல்லாம, ஃபேமிலியோட வெளியில போறோம்னு அவர் சொன்னதாகத்தான் எனக்குத் தகவல் வந்தது. ரெண்டு மணி நேரத்துல வர்றதா சொல்லிட்டுப் போனவர் திரும்ப வரவே இல்ல. போனையும் எடுக்கலை.

மறுநாள் காலையில் வந்து அதுக்குப் பதிலா இன்னைக்கு ஃப்ரீயா நடிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றார். முதல் நாள் எடுக்க வேண்டிய சீன்களை மறுநாள் எடுக்க முடியுமா? ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு இது தெரியாதா? இவரால் தயாரிப்பு நிறுவனத்துக்கு அன்னைக்கு நஷ்டம்.

போனை எடுத்துப் பேசலாமேனு கேட்டதுக்கு ‘வழியில ஒரு சின்ன விபத்து. என் ஃபோனை போலீஸ் பிடுங்கி வச்சிட்டாங்க’ன்னு சொல்றார். இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு?

‘கயல்’ தொடரில் சைத்ரா

இன்னொரு நாள் சீரியலுக்கும் தேதி கொடுத்துட்டு அதே நாளை ரஜினி சார் நடிக்கிற ‘தலைவர் 170’ படத்துக்கும் கொடுத்திருக்கார். சென்னையில காலையில ஷூட்டிங். ஆனா இவர் ரஜினி சார் படத்தின் ஷூட்டிங்ல திருநெல்வேலியில இருக்கார். எங்களுக்குத் தகவலே இல்லை.

நாங்க இங்க அவரைத் தேடிட்டிருக்க, திருநெல்வேலியில இருந்து ரஜினி சார் படத்தின் மேனஜர் எனக்கு போன் பண்ணி, ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’ன்னு சொல்றார். ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட இந்த மாதிரி நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஷூட்டிங்ல இப்படிக் குழப்பம் வந்ததாலதான் தொடர்ந்து அவரை வச்சு ஷூட்டிங் பண்றதுல சிக்கல் வந்தது. அப்பக் கூட வஜ்ரவேல்ங்கிற அந்தக் கேரக்டரை நாங்க சீரியல்ல இருந்து தூக்கவோ அல்லது பிர்லா போஸுக்குப் பதிலா இன்னொரு நடிகரை அந்தக் கேரக்டர்ல கமிட் செய்யவோ இல்லை” என்ற செல்வத்திடம்,

“ஷூட்டிங் ஸ்பாட்டுல நீங்க சாப்பிட்ட பிறகுதான் மத்தவங்களைச் சாப்பிட அனுமதிக்கறீங்கன்னும் அவர் சொல்லியிருக்காரே?” எனக் கேட்டோம்.

“இந்தக் குற்றச்சாட்டைக் கண்டிக்கிறேன். அதே நேரம் சிரிப்பும் வருது. ஷூட்டிங் நடக்கிறப்ப நீங்க ஸ்பாட்டுக்கு வந்து யார்கிட்டயாவது கேட்டீங்கன்னா இதுக்கான பதிலைத் தெரிஞ்சுக்கலாம்” என்றார் அவர்.

பிர்லா போஸ்

“என் கேரக்டரைத் தூக்கிவிட்டார்கள்” என பிர்லா போஸ் கூற, “அந்தக் கேரக்டரைத் தூக்கவே இல்லை” என இயக்குநர் தரப்பில் பதில் கிடைக்க, எது உண்மை என சீரியல் தொடர்புடைய வேறு சிலரைக் கேட்டோம்…

“பிர்லா போஸ் நடிச்சிட்டிருந்தப்பவே கதைப்படி, அவர் ஒரு வழக்கைச் சரியா டீல் செய்யலைனு சஸ்பெண்ட் ஆனதா காட்டினாங்க. சஸ்பென்ஷன் அப்படியே இருக்கு. அவர் சஸ்பெண்ட் ஆனதால அவர் விசாரிக்க வேண்டிய வழக்குகளை இன்னொரு அதிகாரி விசாரிக்கத் தொடங்கியிருக்கார்” என்கிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: