இந்தியா:
இன்று முதல் வங்கிகளுக்கு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த 6 நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை என்பது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. ஆனால் சில இடங்களில் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 18 – தைப்பூசம் (சென்னை)
ஜனவரி 22 – நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 23 – ஞாயிறு விடுமுறை
ஜனவரி 25 – இமாசலப் பிரதேச மாநிலம் உருவான நாள்
ஜனவரி 26 – குடியரசு தினவிழா
ஜனவரி 31 – அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை
அண்மையில்தான் பொங்கல் பண்டிகையையொட்டி சில தினங்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
+ There are no comments
Add yours