சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே தாசகாப்பட்டி சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த வே. பழனிசாமி,சிறிய வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்தி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
நிலமீட்பு போராளி மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் அர்த்தனாரி வாத்தியார் அவர்களோடு பழனிசாமி இணைந்து சேலம் மாவட்டம் முழுவதும் ஏழை எளிய விவசாய மக்களுக்கு குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி பொது மக்களின் பிரச்சனைகளை தீர்த்து
வைத்திருக்கிறார்.
குறிப்பிடத்தக்கது.அவருடைய இந்த பத்தாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பழ.ஜீவானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன்,மாநில குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன்,பரமசிவம்,தங்கவேல், கிருஷ்ணன் மற்றும் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் போராளி பழனிசாமியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கொடி ஏற்றப்பட்டு,போராளி பழனிசாமியின் புகழ் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
– மாரி
+ There are no comments
Add yours