சேலம்:
பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் கலந்து கொண்டு விளையாடி அசத்தினர்… உறியடி போட்டியில் கலந்துகொண்டு உறியடித்த மாநகர காவல் ஆணையர்…!
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முதல் நாளான இன்று இது விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா தலைமையில் துணை ஆணையாளர்,உதவி ஆணையாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவலர்களும் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்து குடும்பத்துடன் சிறப்பாக பண்டிகையை கொண்டாடினர். குறிப்பாக சூரிய பகவானுக்கு பொங்கலைப் படைத்து அனைவரும் வழிபட்டனர்.
இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதனிடையே உறியடி போட்டியில் மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு உறியடித்தார். மேலும் காவலர்கள் மேளதாளங்கள் வாசித்து அசத்தினர். இந்த பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
– சுவாதி
+ There are no comments
Add yours