வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இறந்தவருக்கு கடன் வழங்கிய அதிகாரிகள்..! சம்மன் அனுப்பியதால் பரபரப்பு…!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் எடப்பாடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இறந்தவருக்கு கடன் வழங்கிய அதிகாரிகள்..

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து அவருக்கு கடன் வழங்கியதாக சம்மன் அனுப்பியதால் பரபரப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி பகுதியில் ss877 வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்இந்த சங்கத்தில் விவசாய கடன் வழங்கியதில் 2016 மற்றும் 2021
ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசு தள்ளுபடி செய்த கடைகளில் முறைகேடு செய்து உள்ளதாகவும் கூறி கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கும் கடந்த மூன்று மாதங்களாக சங்க உறுப்பினர்கள் புகார்களை அனுப்பி வருகின்றனர்.


இது பற்றி விசாரணை உத்தரவிட்டபோது வெள்ளரிவெள்ளி அருகே உள்ள விட்டுவாப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இறந்துவிட்டார்.இந்த நிலையில் இறந்து போன ராமசாமி கடந்த 2019ஆம் ஆண்டு வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், இதனை கட்டுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூட்டுறவுத் துறை சார் பதிவாளர் முரளிகிருஷ்ணன் கடந்த மாதம் இரண்டாம் தேதி சம்மன் அனுப்பியுள்ளார்.

இறந்துபோன ராமசாமியின் மகன் சித்துராஜ் கடந்த மாதம் பத்தாம் தேதி ஆஜராகி தன் தந்தை இறந்ததைக் கூறியதுடன் இறந்தவர் பெயரில் கடன் எடுத்து முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.இந்த நிலையில் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2014 மற்றும் 2021 ஆண்டு தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டு முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கட்டணங்களை வசூல் செய்ய வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours