விருதுநகர்:
மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கும் முன் கொரோனா பரிசோதனையில் பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன், அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு வந்த விருதுநகர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதை தொடர்ந்து எம்எல்ஏ வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதேபோல வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், ஆர்டிஓ விஷ்ணுபிரியா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours