சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்த 23 புலிகள் இறந்துள்ளன.இதில் 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. ஒரு புலி மின்சாரம் தாக்கி பலியானது. இது தொடர்பாக தேசிய புலிகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2021ல் முதுமலை புலிகள் காப்பகம், ஹாசனூர் மற்றும் கேவை வனவிலங்கு சரகத்தில் 3 புலிகள் இறந்து இருப்பது தெரியவந்துள்ளது. 2020ம் ஆண்டு சத்தியமங்கலம், ஆனைமலை மற்றும் ஹாசனூர் சரக்கத்தில் மொத்தம் 8 புலிகளும் 2018ல் 5 புலிகளும் 2019ல் 7 புலிகளும் இருந்துள்ளன.
இவை தவிர்ந்து கடந்த 4 ஆண்டுகளில் வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இருந்த 9 புலிகள் இறந்துள்ளன. அதே நேரத்தில் 2014 முதல் 2017 வரையிலான முந்தைய 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளன. புலிகள் இறப்பதை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மாநில அரசுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அதற்கு பலன் கிடைத்து இருப்பதாகவும் வன சரக்க காப்பகம் மற்றும் வனவிலங்கு காப்பக ஆணையர் தெரிவித்துள்ளார். அதே போல கடந்த சில ஆண்டுகளில் வனவிலங்கை பாதுகாக்கும் நடைமுறை மேம்பட்டு இருப்பதாகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் குறைந்து இருப்பதாகவும் இயற்கை பாதுகாவலர் அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் புதிய தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக வனத்துறைக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் வனவிலங்குகளின் இறப்பு மேலும் தடுக்கப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours