சேலம் :
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க பொதுவெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 500 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காத கடைகள் உடனடியாக மூடப்படும் என எச்சரித்தார்.
+ There are no comments
Add yours