கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் உலகம், அதைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கு முன்னரே கொரோனாவின் அடுத்த தலைமுறை ஒன்று உருவாகி பாதிப்பையும் தொடங்கிவிட்டது.
கொரோனாவின் புதிய பிறழ்வான, B.1.640.2, IHU என்று அழைக்கப்படுகிறது, இது கடந்த மாதம் தெற்கு பிரான்சில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அடுத்து இந்த வகை கொரோனா அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்த மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள தடுப்பூசிகளின் வீரியத்திற்கு கட்டுப்படும் தன்மை IHUவுக்கு (New variant of Corona) அதிகம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இருப்பினும், புதிய வகை வைரஸின் தன்மை பற்றி உறுதியாக கூறுவதற்கு மேலும் பல ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என கூறப்படுகிறது.
பிரான்சின் மார்செய்லி பகுதியில் குறைந்தது 12 பேர் IHU வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவருக்கு IHU வகை வைரஸ் பாதிப்பு இருந்தது முதன்முதலாக கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் மருத்துவ உயிரியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட RT-PCR சோதனையில் அவருக்கு SARS-CoV-2 இருப்பது கண்டறியப்பட்டது. நோயறிதலுக்கு முந்தைய நாள் அந்த நபருக்கு லேசான சுவாச பிரச்சனை ஏற்பட்டது. பிறகு, அதே பகுதியை சேர்ந்த கோவிட் (COVID-19) நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளும் IHU வகை வைரஸ் இருப்பதை காட்டின.
முதன்முதலில் டிசம்பர் 10 ஆம் தேதி IHU வகை மாறுபாட்டைக் கண்டறிந்தனர், அதன்பிறகு அதை ஆய்வு செய்து, அதை கணித்து புரிந்து கொள்ள முயன்றனர். இதில் இதுவரை 46 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.
SARS-CoV-2 இன் இந்த திரிபு N501Y பிறழ்வைக் கொண்டுள்ளது. இது, முதலில் ஆல்பா மாறுபாட்டில் காணப்பட்டது என்றும், இது மேலும் பல பிறழ்வுகளாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
டிசம்பர் 29ஆம் தேதியன்று ஆன்லைனில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள், புதிய வகை வைரஸ் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்றாலும், IHU வகை வைரஸானது 46 பிறழ்வுகளை கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மற்ற நாடுகளில் இந்த மாறுபாடு இன்னும் கண்டறியப்படாததால், உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) இது குறித்து இன்னும் எந்தவொரு அறிவிக்கையையும் வெளியிடவில்லை. தொற்றுநோய்களின் போது புதிய மாறுபாடுகள் வெளிவருகின்றன, ஆனால் அவை அனைத்தும் வைரஸ் அல்லது கடுமையான நோயை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா நேரத்திலும் பல புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை என்று அர்த்தமல்ல. ஒரு மாறுபாட்டை மிகவும் நன்கு அறியப்பட்டதாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குவது அசல் வைரஸுடன் தொடர்புடைய பிறழ்வுகளின் எண்ணிக்கையின் காரணமாக அதன் பெருக்கும் திறன் ஆகும்.
நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானால் COVID-19 பாதிப்பு அதிகரித்துள்ளது. பிறகு விரைவாக இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகரித்து அச்சங்களை அதிகரித்துள்ளது ஒமிக்ரான்.
+ There are no comments
Add yours