சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு பிரபு- விஜய் என்கிற மகன்கள் . பிரபுவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். தனிமையில் இருந்த அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. பிரபு வெளிநாட்டில் இருந்ததால் இருவருக்கும் ரொம்பவே வசதியாக போய்விட்டது. அடிக்கடி ஏற்காடு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த பிரபு திரும்பி வந்ததும் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கச்சராபாளையம் என்கிற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால் மஞ்சுவும் விஜய்யும் உல்லாசம் அனுபவிக்க முடியாமல் போனது. இதையடுத்து இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வைத்தபடி ஏற்காடுக்கு சென்றிருக்கிறார்கள்.அங்கே அறை எடுத்து இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளார்கள். அதன்பிறகு தனக்கு திருமணமாக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார் விஜய்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் செய்து கொண்டால் நான் என்ன ஆவது என்று கேட்டிருக்கிறார் மஞ்சு. வேறு வழி இல்லை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி இருக்கிறார் விஜய். இதன் பின்னர் இருவரும் தூங்கி விட்டனர்.பாதித் தூக்கத்தில் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த அண்ணியை காணவில்லை . அப்போது பாத்ரூமிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்டதால் அவர் பாத்ரூம் போய் இருக்கிறார் என்று நினைத்து தூங்கியிருக்கிறார் விஜய் . பின்னர் மீண்டும் நெடுநேரம் கழித்து கண்விழித்த போது பாத்ரூம் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் பாத்ரூமை உடைத்திருக்கிறார். அப்போது நிர்வாண நிலையில் மஞ்சு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
உடனே அவரை தூக்கில் இருந்து இறக்கி கட்டிலில் கொண்டுவந்து போட்டு அவருக்கு ஆடைகளை உடுத்தி விட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்திருக்கிறார் எழுந்திருக்கவே இல்லை. அப்போதுதான் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது உடனே போலீசாருக்கு அவரே தகவல் சொல்லவும், ஏற்காடு போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு, மஞ்சுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, உண்மையிலேயே தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பிரபுவை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours