தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தலைமறைவான அவரை, தமிழக காவல்துறையினர் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக தேடினர்.
8 நாட்களுக்கும் மேலாக காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அவர் கர்நாடகாவில் இருப்பது தமிழக காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், ஹாசன் மாவட்டத்தில் இருந்த அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அவருடன், தலைமறைவாக இருக்க உதவியகிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தனியார் காரில் அழைத்து வரப்பட்ட ராஜேந்திரபாலாஜியை, மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பா.ஜ.க நிர்வாகி உட்பட 5 பேரை, பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் விருதுநகர் அழைத்துச் செல்கின்றர். அங்கு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இன்றிரவே சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours