இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அர்த்தனாரி வாத்தியார் அவர்களக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார்…

Estimated read time 1 min read

சேலம்:

நங்கவள்ளி அருகே மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அர்த்தனாரி வாத்தியார் அவர்களக்கு மணிமண்டபம் கட்ட நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஏற்பாடு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொது செயலாளர்து. ராஜா EX. MP அவர்கள் மற்றும் சுப்புராயன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்..

மேலும் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது..

இந்தியாவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பிஜேபி, அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றி பெறாது. 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோல்வி அடையும், ஆட்சி மாற்றம் ஏற்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளரும் அர்த்தநாரி வாத்தியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39-ம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் .மேலும் சிறப்பு விருந்தினார்களா திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி ,மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் அர்த்தநாரி வாத்தியார் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது. ராஜா பாஜக ஆட்சி ஆர்.எஸ்.எஸ், இயக்கத்தால் இயக்கப்படுகிறது. இந்த ஆட்சி பின்பற்றும் கொள்கைகள் மக்கள் விரோத கொள்கைகளை தேசவிரோத கொள்கைகளாக உள்ளது.

மோடி அரசாங்கம் பின்பற்றக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள் அதானி, அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், தேசிய வளங்களை கொள்ளை அடிப்பதற்காக உள்ளது. இதனால் இந்தியாவில் ஏழ்மை நிலை உயர்ந்து வருவதாக உலக அளவிலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தேசிய சொத்துக்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம் ,உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பிஜேபி அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் பிஜேபி , தோல்வியடைந்தால் 2024-ம் ஆண்டு அனைவரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோல்வி அடையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நச்சப்பன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் மாநில செயற்குழு உறுப்பினர் லகுமையா
ராஜேந்திரன் அனுராதா கிருஷ்ணன் ஆகிய கட்சி நிர்வாகிகள் உள்பட பொது மக்கள் 500 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours