சேலம்;
சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் இலவச வீட்டுமனை மற்றும் வீடு ஒதுக்கீடு வழங்காமல் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாக கூறி, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளே மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலமாக வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் அலுவலகத்தின் நடைமுறையில் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தனது கோரிக்கைக்கு உதவி வழங்காமல் தவறான தகவல் சொல்லி அலைக்கழித்து வருவதாக கூறினார். மாநகராட்சி வெளியே 16 கிலோமீட்டர் தூரத்தில் ஏதேனும் ஒரு ஊராட்சி பகுதியில் தனது எங்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours