சேலம்;
செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதி வழங்க கோரி செங்கல்சூளை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….
தற்போது வந்துள்ள ஆட்சியாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் செங்கல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக செங்கல் தயாரிப்பாளர்கள் பேட்டி…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி பகுதியில் 200க்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் செம்மண் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது செங்கல் தயாரிக்க முடியாமல் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் இதனை நம்பியுள்ள ஏராளமான கூலித் தொழிலாளிகள் கட்டிட பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் செங்கல் தயாரிப்பதற்கான மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஈடுபட்டனர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அனுமதித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது .
+ There are no comments
Add yours