சென்னை;
சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவு துறை
அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்
பேட்டி, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான
பொங்கல் தொகுப்பு வழங்கபட உள்ளது. சுமார்
600 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட
உள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்போது
சரியான எடை மற்றும் தரத்துடன்
வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ள
பொங்கல் தொகுப்பினை கட்டாயம் கைரேகை
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப
அட்டைதாரர்கள் யாரேனும் ஒருவர் சென்று
பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல்
ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள்
வழங்கப்படும்.
டோக்கன்கள் முன்னதாகவே
வினியோகிக்கப்பட்டு வழிமுறைகளை பின்பற்றி
பொங்கல் தொகுப்புகள் ரேஷன் கடைகளில்
வழங்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் 30 லட்சம் மெட்ரிக்
டன் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 12 லட்சம்
மெட்ரிக் டன் மட்டுமே விநியோகித்து விட்டு மீதம்
அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தேவைக்கு அதிகமாக
கூடுதல் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா?
அந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து
முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.
உணவுப் பொருளான வெல்லத்தில் கலப்படம்
நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க
தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கண்காணிப்பு
குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்து
வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
+ There are no comments
Add yours