சேலம் பாஜக சார்பில் தொழிலாளர் நலவாரிய முகாம்..,

Estimated read time 0 min read

சேலம்;

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் பாஜக சார்பில் நடத்திய மத்திய அரசின் நலவாரிய அட்டை பதிவு செய்யும் முகாம் பாஜக நெசவாளர் அணி செயலாளர் ஐயப்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பாஜக மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மாவட்ட பொது செயலாளர் கலைச்செல்வன் மாவட்ட செயலாளர் ஹரிராமன் மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் விக்னேஷ் வீரபத்திரன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது..


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் இலவசமாக மத்திய அரசின் நலவாரிய அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாம் பாரதிய ஜனதா கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது பெயரை இலவசமாக பதிவு செய்து கொண்டனர்.

மத்திய அரசு வழங்கும் இந்த நலவாரிய அட்டை மூலம் 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள் பதிவு செய்து பயன் பெறலாம். இதில் கட்டுமான தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், தினக்கூலி பணியாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஓட்டுனர், சுமைதூக்கும் பணியாளர்கள், ஏற்கனவே நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் தொழிலாளர்களும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நல வாரிய அடையாள அட்டை மூலம் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு 5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம், தேசிய அளவில் ஒப்புக்கொண்ட நிரந்தர பதிவு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும், விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விபத்தால் ஏற்படும் மரணம் மற்றும் முழு உடல் ஊனத்திற்கு இரண்டு லட்சம் வரை இழப்பீடு பெறுவதற்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் அனைத்து பயன்களும் நேரடியாக வழங்கப்படும். இந்த சலுகைகளைப் பெறுவதற்காக ஜலகண்டாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய மத்திய அரசின் நலவாரிய அடையாள அட்டை இலவசமாக பெறுவதற்கான பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை ஜெராக்ஸ் ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகள் கொடுத்து பதிவு செய்து கொள்ள ஜலகண்டபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பதிவு செய்தனர்..

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours