சேலம்;

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்..சேலத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…

பாரதிய மஸ்தூர் சங்கம் உடன் இணைக்கப்பட்ட பாரதி டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்குமார், ராஜகோபால், மாயன், முனுசாமி, சுடலைமுத்து ஆகியோர் இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவிப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்,டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மிகக்குறைவாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.இதனை மேற்கண்ட பணியாளர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே அவர்களுக்கு 18 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பஞ்சப்படி என்கிற நிதிநிலை சம்பளம் வழங்கிட வேண்டும்.டாஸ்மாக் ஊழியர்களின் பணி நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என நேரத்தை நிர்ணயம் செய்து டாஸ்மாக் ஊழியர்களை காத்திடும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மூலமாக பணிகளை வழங்க வேண்டுமென உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மகாலிங்கம், அன்பரசன் உள்ளிட்ட சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *