பூந்தமல்லி;
பூந்தமல்லியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது. பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளரான ராஜன் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பணியில் இருந்தார். போக்குவரத்து பணியில் இருந்த போது லாரி ஓட்டுனர்களிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது. வீடியோவில் தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் என மிரட்டி பணம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. மேலும் அதேபோல் நான் சொல்வதை கேட்டால் எனக்கு சந்தோஷம், நீ சொல்வதை கேட்டால் உனக்கு சந்தோஷம் என டயலாக் பேசி அடுத்தடுத்து மூன்று பேரிடம் லஞ்சம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. அதேபோல் லாரி உரிமையாளர்கள் லாரி பழுதானால் 10 ஆயிரம், 20 ஆயிரம் செலவு செய்வார்கள் ஆனால் நாங்கள் கேட்கும் 100, 50 க்கு கணக்கு பார்பார்கள் என புலம்பியுள்ளார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதை லாரி ஓட்டுனர் ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours