சபரிமலை:
சபரிமலை சன்னிதானம் அருகே பாண்டி தளத்தில் அடிக்கடி யானைகள் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான திருமுற்றத்திலிருந்து 108 படிகள் வழியாக பாண்டி தாவளம் செல்லலாம். இந்த வழியாகத்தான் புல்மேடு செல்ல வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சீசனில் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பாண்டி தாவளம் பகுதியும் வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு இரண்டு ஓட்டல்கள் செயல்படுகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு ஆண் யானை உட்பட ஐந்து யானைகள் இந்த ஓட்டல்களின் பின்புறம் வந்து நீண்ட நேரம் நின்றன. அங்கு இரை தேடிவிட்டுஅமைதியாக திரும்பி சென்றுவிட்டன. இப்பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் வருவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours