விழுப்புரம் :
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து, ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) செங்கமலச்செல்வன், வழக்கு விசாரணை இன்று 23ம் தேதி மீண்டும் நடைபெறும் என உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours