சென்னை:
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஒரு பிளாஸ்டிக் பை, மக்களால் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை மக்க எடுத்து கொள்ளும் காலம் பலநுாறு ஆண்டுகள்.எனவே, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப் பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும், மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில், ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசார நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், பிரசாரம் துவங்குகிறது. பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சி, மாலை 7:00 மணி வரை நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours