தில்லியில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டைக் கொண்டாடும் வகையிலான கலாச்சார நிகழ்வுகள்/கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று DDMA தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகரில் ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (Delhi Disaster Management Authority)புதன்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது. மேலும், பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அதிகார வரம்புகளிமும் முன்னெடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியது. தேசிய தலைநகர் முழுவதும் உள்ள கடைகள்/பணியிடங்களில் ‘மாஸ்க் இல்லை என்றால், அனுமதி இல்லை’ என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என்று DDMA கூறியது குறிப்பிடத்தக்கது.
புதிய உத்தரவில், தில்லியில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டைக் கொண்டாடும் வகையிலான கலாச்சார நிகழ்வுகள்/கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று DDMA தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் வகை (Omicron) தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் ஆலோசனை மேற்கொள்கிறார். மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பரவும் ஓமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், தொற்றுநோய் நிலைமையை பகுப்பாய்வு செய்வதற்கும், அமைக்கப்பட்ட குழு, இரு நாட்களுக்கு முன் “இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நாட்டில் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இரண்டாவது அலையை விட இது மிதமானதாக இருக்கும். மூன்றாவது அலை கண்டிப்பாக ஏற்படும். தற்போது தினசரி தொற்று பாதிப்பை பொறுத்தவரை, 7,500-ஐ நெருங்கிவிட்டோம். ஒமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் நிலையில், தினசரி தொற்று பாதிப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும்” என்று அமைக்கப்பட்ட கோவிட் குழு கூறியது.
+ There are no comments
Add yours