தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை.,

Estimated read time 1 min read

வேலூர்:

தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனைக்கு ஆய்வாகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதித்தால் இங்கேயே பரிசோதனை முழுமையாக மேற்கொள்ளபடும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். வேலூரில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பேருந்தினுள் வழங்கி விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் , சுகாதார இணை இயக்குநர் கண்ணகி நகர் நல அலுவலர் மணிவண்ணன் உதவி ஆணையர் வசந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓமிக்ரான் அச்சம்

நிகழ்ச்சிக்குப் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 104 நபர்களுக்கு தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓமிக்ரான் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்து அவசியம் என்றார்.

தடுப்பூசி அவசியம்

பொது இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மேலும் பொதுமக்கள் தானாக முன் வந்து தடுப்பூசியை செலுத்திகொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் உதவி செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் ஓமிக்ரான் தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் தடைவிதிக்கபடும் எனவும், மற்ற பகுதிகளுக்கு தடைவிதிக்கும் எண்ணமில்லை எனக் கூறினார்.

படுக்கைகள் தயார்

உலக சுகாதார நிறுவனம் கூறும் அத்தனை வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றும் எனவும், தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரும் நோய்பரவலை கட்டுபடுத்த முழு முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 1,75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது எனக் கூறிய ராதாகிருஷ்ணன், இப்போது வந்துள்ள ஓமிக்ரானால் நுரையீரல் பாதிப்பில்லை என்பதால் ஆக்சிஜன் தட்டுபாடு ஏற்படாது எனவும், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுபாடில்லாமல் கிடைக்கும் எனக் கூறினார்ம்

3வது டோஸ் தடுப்பூசி

தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை ஆய்வகம் தமிழக முதல்வரின் ஆலோசனையின் படி புதியதாக டி.எம்.சியில் துவங்கியுள்லதாகவும், மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இங்கேயே பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிப்போம் எனக் கூறிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 85 சதவிகிதம் தான் போடப்பட்டுள்ளது எனவும், மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் எனவும், மூன்றாவது டோசுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூறினார் .

-Rajkumar R

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours