நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாம கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.
நெல்லை கங்கைகொண்டானை சேர்ந்தவர் நந்தினி. இவர் சிப்காட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நான்கு வழிச் சாலையின் நடுவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உடையின்றி நடந்து வருவதைப் பார்த்துள்ளார்.
உடனடியாக தன் வாகனத்தில் இருந்த ஜரிகை வைத்திருந்த பொன்னாடையை எடுத்து அவரது இடுப்பில் கட்டிவிட்டதுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவை வாங்கி வந்து அந்த நபருக்கு தாயாக மாறி ஊட்டி விட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours