புதுக்கோட்டை;
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இரண்டு படகு மற்றும் 14 மீனவர்களை கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் மற்ற மீனவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப் படகு மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர் நேற்று இரவு இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இரண்டு படகையும் படகில் இருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரை கைது செய்து அதிர்ச்சிக்குள்ளான மறைவதற்குள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இரண்டு படகையும விடிவுக்கு வரை இந்த போராட்டம் தொடரும் என மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மீனவர்களையும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-P.RAJESH
+ There are no comments
Add yours