சென்னை:
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில் அமுன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும், பொங்கல் பரிசுத்தொகையை அறிவிக்க வேண்டும், குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 திட்ட வாக்குறுதி, பெட்ரோல், டீசல் விலையில் ரூபாய் 5 குறைப்பு, நீட் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் இந்த திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மாரிதாஸ், அரசின்மீது அவதூறு பரப்புகிறார் என்று சொல்லி அவரைக் கைது செய்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்து பாருங்க என்று சி.வி.சண்முகம் சவால் விட்டார். இந்த ஆட்சியிலே சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. கொலைகள், பாலியல் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய தமிழக டிஜிபி டி.ஜி.பி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்டுகிறார். சைக்கிள் ஓட்டுவதுதான் அவருக்கு வேலையா? என்று சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில். அமைச்சர்கள் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. அவர்கள் பேருக்கு மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர். ஒரேயோர் அமைச்சருக்கு மட்டும் வேலை உண்டு என்று அமைச்சர் எ.வ.வேலு பெயரை குறிப்பிட்டு அவர் தாக்கினார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு 50,000 ரூபாய்கூடத் தர முடியாத அரசுதான் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 1 கோடி ரூபாய் கொடுங்கள் என்றது. இப்போது கொடுக்கவேண்டியதுதானே என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours