கோவை “நான் தான் பாலா”அவதூறு கருத்தை வெளியிட்ட நபர்? பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலை தளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.,

Estimated read time 1 min read

கோவை;

கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08. 12. 2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலை தளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். எனவே இதனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கூறியாவறு” நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் செய்தி வெளியிட்ட நபர் மீது சாதி, மதம், இனம், மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல், அமைதியைக் குலைக்க தூண்டும் வகையிலும் மற்றும் இருவேறு வகுப்புகளுக்கிடையே தீய எண்ணத்தை உருவாக்கும் உரைகளை வெளியிட்டது என
மூன்று சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவதூறு கருத்தை வெளியிட்ட நபரை சரவணம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-Mohamed Bilal

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours