சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் 129 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பி. சிவலிங்கம் முன்னிலை வகித்தார். முதுநிலை கோட்ட பணியாளர் அலுவலர் பி. கே. சௌந்தரபாண்டியன், முதுநிலை நிதி மேலாளர் எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த குறை தீர்க்கும் முகாமில் 145 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 129 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, சுமார் ரூ. 1. 05 கோடிக்கு தீர்வு எட்டப்பட்டது. 16 மனுக்களை பரிசீலித்து உரிய தீர்வு காணப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours