இளம் தலைமுறையினருக்கான எல். ஐ. சி-யின் தன் ரேகா உத்தரவாதமான பயன்களுடன் புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டத.சேலம் கோட்ட முதுநிலை மேலாளர் கே. சுதாகர், புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தன் ரேகாவின் அதிகபட்ச பாலிசி காலம் மிகுந்த பயனளிக்கும். 6 ஆவது வருட பாலிசி காலத்தில் இருந்து ரூ. 1000 காப்பீட்டு தொகைக்கு ரூ. 50 உத்தரவாத கூடுதல் தொகையாக வழங்கப்படும். தன் ரேகாவின் பாலிசி காலம் 20,30, 40 ஆண்டுகள் ஆகும். பிரீமியத்தை ஒற்ற தவணையாகவோ அல்லது 10, 15, 20 ஆண்டுகளில் செலுத்தலாம். இது இளம் பெற்றோர்களுக்கு மிகவும் உகந்த பாலிசியாகும். குழந்தைகளின் கல்வி, ஓய்வூதியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வருமானவரி விலக்கு பெறலாம். வாழ்வு கால பயன் அளிக்கப்பட்டிருந்தாலும் முழுக்காப்பீட்டு தொகையை அளிக்கும் முதல் மணி பேக் திட்டமாகும். 90 நாள் குழந்தை முதல் 60 வயது வரையுள்ளோருக்கு இப்பாலிசி
கிடைக்கும். கடன் பெறும் வசதி பாலிசியில் உண்டு. பெண்களுக்கான பிரீமியத் தொகைக்
குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
-Naveenraj
+ There are no comments
Add yours