தேசிய நெடுஞ்சாலை அருகில் மரணக் குழி வெட்டி உயிர் பலிக்காக பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் காத்திருப்பதாக குற்றச்சாட்டு.,

Estimated read time 1 min read

கன்னியாகுமரி;

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 220 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் துவக்கப்பட்டு மிக வேகமாக “ஆமை வேகத்தில்” நடந்து வருகின்றன. அதற்கான குழாய் பதிக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலையை சிதைத்து பல நாட்களாக நடந்து வந்தது. இதுவரையும் அந்தப் பள்ளங்களை மேற்படி குழாய் பதித்த பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளோ தேசிய நெடுஞ்சாலைத்துறையோ சீரமைக்க வில்லை என்பதுதான் ஹைலைட். இதனால் தேசிய நெடுஞ்சாலை சீரழிந்து மலைப்பாதை சாலையாக மேற்படி அதிகாரிகளால் மாற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதித்து பல இடங்களிலும் அதற்கான வால்வுகள் அமைக்க சாலை மட்டத்திலிருந்து சுமார் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி பல இடங்களிலும் வால்வு அமைக்கப்பட்டது. அவ்வாறு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அமைக்கப்பட்ட ஒரு சில இடங்களில் அந்த குழிகள் காங்கிரீட் சிலாப்புகளால் மூடப்பட்டு இருந்தது. அவ்வாறு மூடப்பட்ட ஒன்றிரண்டு இடங்களில் வாகனங்கள் ஏறி இறங்கியதில் காங்கிரீட் உடைந்து வாகனங்கள் குழியில் சிக்கி கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியது. மேலும் பல இடங்களில் வால்வுகள் அமைக்க குழி தோண்டப்பட்டு அதை மூடாமல் கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் வைத்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை எண் 47 ல் வெள்ளி கோடு இரட்டான் விளை ஆபத்தான வளைவு பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு செய்வதற்காக சாலை மட்டத்திலிருந்து சுமார் 5 அடி ஆழத்தில் வால்வுகள் அமைக்கப்பட்டது. அதன் மேற்பகுதி கூர்மையான கம்பி 5 அடி ஆழத்தில் ஒன்றரை அடி மேல்நோக்கி உள்ளது. அந்தக்குழிகளை காங்கிரீட் சிலாப்புகள் கொண்டு மூடாத காரணத்தால் அதன் வழியே செல்லும் மக்கள் கால் இடறி வால்வின் மீது விழுந்து உயிர் பலியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 

அப்பகுதி மிகவும் பரபரப்பான வர்த்தகப் பகுதி ஆகும். குறிப்பாக கட்டுமான பணிகளுக்கு தேவையான கம்பிகள் பிளம்பிங் பைப்புகள் கிரானைட் கற்கள் ஆகியவை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வாகன பராமரிப்பு மையங்கள் மின்சார விநியோக அலுவலகம் வாழைக்குலை மொத்த வியாபார கடைகள் பழுதுபார்ப்பு கடைகள் உட்பட பல்வேறு வியாபார நிறுவனங்கள் இயங்கி வரும் பகுதியாகும். அந்தப் பகுதியில் இவ்வாறு குடிநீர் குழாய்க்கு சுமார் 5 அடி ஆழங்களில் வால்வு அமைக்க குழி தோண்டி அதை காங்கிரீட் சிலாப்புகளைக் கொண்டு மூடாமல் உள்ளதை பார்க்கும் போது, பாலம் பணி அல்லது பெரிய அணைக்கட்டுகள் ஆகியவற்றை கட்டும்போது மூட பழக்கத்தின் காரணமாக அதற்கு ஏதாவது உயிர் பலி கொடுக்க வேண்டும் என்றும் பண்டைய காலத்தில் அரசர்கள் அவ்வாறு செயல்படுத்தியது ஆகவும் ஒரு கருத்து கூறுவது உண்டு.

அதேபோல சுமார் 220 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு அதேபோல உயிர்பலி கொடுப்பதற்காகவே இதுபோன்ற ஆபத்தான குழிகளை சிமெண்ட் சிலாப்புக்கள் கொண்டு மூடாமல் அதிகாரிகள் மறைமுக சதி செய்து காத்திருக்கின்றனரோ என்று சந்தேகப்படும் விதத்தில் பல மாதங்களாக ஆபத்தான வகையில் அப்பகுதியில் உள்ள குழி மூடப்படாமல் பொதுமக்களின் உயிரை பழிவாங்க காத்துக் கொண்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இவ்வாறு உள்ள ஆபத்தான குழிகள் மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பவை என்பதை அதிகாரிகள் உணர்ந்து உடனடியாக அந்த குழிகளை சிமெண்ட் சிலாப்புக்கள் கொண்டு மூட வேண்டும் என்பதும் அவ்வாறு மேற்படி திட்டப் பணிகளுக்கு உயிர்பலி ஏதும் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளின் வேண்டுதல்கள் ஏதேனும் இருந்தால் ஏதாவது பறவைகளை பலிகொடுத்து அதை நிறைவேற்றி கொள்வதோடு மக்களின் உயிர்காக்க பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் விதத்தில் ஆபத்தான வகையில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அந்த குழியை கான்கிரீட் சிமென்ட் சிலாப் புக் கொண்டு உடனே மூட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours