இருசக்கர வாகனங்களை திருடும் திருடனை அதிரடியாக தட்டி தூக்கிய சேலம் மாவட்ட காவல்துறை

Estimated read time 1 min read

சேலம்;

சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா அவர்களின் உத்தரவின் பேரில் திரு.N.மோகன்ராஜ் துணை ஆணையாளர் தெற்கு அவர்கள் மேற்பார்வையில் சேலம் டவுன் சரகம் காவல் உதவி ஆணையாளர் திரு.A.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் சேலம் நகர குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.விஜயகுமாரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.சம்பத்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்லப்பன், கோவிந்தராஜ் தலைமை காவல் அசோகன், பாலசுப்ரமணி ஆகியோர்கள் கிடைத்த தகவலின் பேரில் 21.11.2020-ம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாஜி சிலை

அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது TN 30 AA 9535 என்ற பதிவு எண் கொண்ட Hero Honda Splendor plus என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தில் நிறுத்த அவர் தனது வண்டியை கீழே போட்டுவிட்டு தப்பிக்க முயன்றவரை பிடித்து விசாரிக்க சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சந்தைபேட்டை அருகில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரின் மகன் ஜனார்த்தனன் என்பது தெரிந்தது அவரை மேற்கொண்டு விசாரிக்க தான் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சேலம் அரசு மருத்துவனை உள்ளிருந்து திருடியது என தெரியவந்தது அதன் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டது. பின்னர் 24.11.21-ந் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாவட்டம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 44 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்து மேற்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புலன்விசாரணை மேற்கொண்டு வாகனங்களை கைப்பற்றிய போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று வெகுவாக பாராட்டினார்கள்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours