கிரிப்டோ மசோதா எதிரொலி: கிரிப்டோ பண்டுகள் மாற்றுத் திட்டத்தைத் தேட துவங்கியது..!.,

Estimated read time 1 min read

இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும், ஒழுங்கு முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக மசோதாவைச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் கிரிப்டோகரன்சியின் மீதான அரசின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குழப்பமாகவே இருக்கும் நிலையில், பல பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பண்டுகள் தங்களது முதலீட்டைக் கொள்கையை மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளனர்.இந்த அவசரத்திற்கான காரணம், 2018ல் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் வர்த்தகத்திற்கான வங்கியியல் சேவையைத் திடீரென தடை செய்த காரணத்தால் பல முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்கப் போராடினர். ஆனால் தற்போது கிரிப்டோ சந்தைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கணிக்கப்பட்டாலும் பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பண்டுகள் தங்களது முதலீட்டைக் கொள்கையை மாற்றத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது,

அம்ஸ்டீன் கேபிட்டல்

அம்ஸ்டீன் கேபிட்டல் என்னும் வென்சர் பண்ட் நிறுவனம் DeFi மற்றும் NFT சார்ந்த பல இந்திய திட்டத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அம்ஸ்டீன் கேபிட்டல் குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோ மசோதா எதிர்நோக்கி நவம்பர் மாதம் முழுவதும் எவ்விதமான கிரிப்டோ முதலீட்டையும் செய்யவில்லை.

 

தயாராக வேண்டும்

இதுகுறித்து அம்ஸ்டீன் கேபிட்டல் நிறுவனத்தின் துணை தலைவர் சச்சின் ஜெயின் கூறுகையில், அரசின் திட்டம் என்னவென்று முழுமையாகத் தெரியவில்லை, இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு ஏதேனும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளையும் திட்டங்களையும் செய்ய வேண்டி கட்டாயம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் டாலர்

கடந்த வருடம் வெறும் 40 மில்லியன் டாலர் மட்டுமே கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் பிரிவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டுச் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி முதலீடுகள் சர்வதேச முதலீடுகள் தான்.

ரீடைல் கிரிப்டோ முதலீட்டாளர்கள்

இந்தியாவில் ரீடைல் கிரிப்டோ முதலீட்டாளர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் வேளையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்பிரிவில் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே 2021ல் மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர்.

பிட்காயின் மதிப்பு

இன்று கிரிப்டோ சந்தையில் பிட்காயின் மதிப்பு 2 சதவீதம் வரையில் சரிந்து 56,651.40 டாலருக்கும், எதிரியம் 4302.77 டாலருக்கும், ரிப்பிள் 1.01 டாலருக்கும், சோலான 197.08 டாலருக்கும், கார்டானோ 1.61 டாலருக்கும், போல்காடாட் 37.01 டாலருக்கும் சரிந்துள்ளது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours