கொரோனா தொற்று காலத்தில் ரயில் நிலையங்களில்சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் நவம்பர் 25/26 நடு இரவு 00.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இருந்தபோதிலும் ரயில் பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை கோட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைப்பு
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours