மதுரை:
மிரட்டித் திருமணம்
கிளாடிஸ்ராணியை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் ஜோதிமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, மனமுமின்றி காதலித்த பெண்ணையே கரம்பிடித்தார் ஜோதிமணி. இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் திருமணம் ஆன 2வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொல்லப்பட்ட நிலையில் முட்புதரில் சடலமாக கிடந்தார்.

மர்ம கும்பல் துரத்தியது
நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் ஜோதிமணி. வழக்கம்போல் இன்று காவல்நிலையம் வந்த ஜோதிமணியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். அவரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வழிமறித்தது அந்த மர்மக் கும்பல். பின்னர் அவரை வெட்டுவதற்காக அரிவாளை தூக்கியபோது உடனடியாக அங்கிருந்து ஓடினார் ஜோதிமணி.
பழிக்குப்பழி
மர்மக் கும்பல் ஓட ஓட விரட்ட உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய ஜோதிமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். இதை பார்த்தவுடன் அரிவாளுடன் வந்த கும்பல் தப்பித்து ஓடியது. உடனடியாக போலீசார் துரத்தியபோதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. தன்னை மனைவியின் வீட்டார்தான் தீத்துக் கட்ட கூலிப்படை அனுப்பி உள்ளதாக ஜோதிமணி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours