உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் சிறுமி காணாமல் போன வழக்கில், காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தின் காவல் நிலைய பொறுப்பாளர் உட்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அல்தாப் தனது சட்டை கயிற்றை கழுத்தில் இறுக்கிக்கொண்டு, அங்கிருந்த பைப்பில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
தங்களது 16 வயது மகளை, அல்தாப் என்ற இளைஞர் கடத்தி சென்றுவிட்டதாக இந்து குடும்பம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், கஸ்கஞ்ச் அருகே அஹிராலி கிராமத்தை சேர்ந்த அல்தாப்பை, விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் போலீஸ் காவலில் இருந்த அல்தாப் திடீரென மரணமடைந்துள்ளார். அவரை கழிவறையில் பார்த்ததும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours