நவம்பர் – 01 – ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் ஆகும்
😃😃😃
🌹முதல் முறையாக நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.!!!
🌹கடந்த 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவாரி அடிப்படையில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன.!!!
🌹இந்நிலையில், தமிழகமும், இந்த நாளை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்ற தமிழக அரசு, நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அறிவித்ததுடன், அதற்காக 10 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கியது.
🌹இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தலைமைச்செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
🌹மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
🌹பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கன்னியாகுமரி என்ற மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.
🌹சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்களில் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றதற்காகக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அன்றைய சென்னை மாநிலம், தமிழ் பேசும் சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்ததால், அது தமிழகத்தில் வருத்தத்தையே ஏற்படுத்தியிருந்தது. பழைய எல்லைப் பிரச்சினைகள் தற்போது விவாதிப்பதற்கு இல்லை என்பதோடு, தமிழகம் தனி மாநிலமானதும் கொண்டாடப்படுவதற்குரிய நிகழ்வு என்பதைத் தமிழ்நாடு அரசு வெளிப்படுத்துகிறது.
+ There are no comments
Add yours