பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், பாகிஸ்தான் நடிகையுடன் துபாய் பார்ட்டியில் கலந்துகொண்ட படங்கள் புயலைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் ஷாருக்கானுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. தற்போது, ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
இவர் அமெரிக்க திரைப்படக் கல்லூரியில் படித்தவர். தந்தையைப்போல நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநராக இருக்கிறார். வெப் சீரிஸ் எடுப்பதற்காக கதை ஒன்றை எழுதி முடித்துள்ள ஆர்யன், விரைவில் அதனை இயக்கவுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆர்யன்கான் பாகிஸ்தான் நடிகையுடன் இணைந்து பார்ட்டியில் கலந்துகொண்டிருப்பது அடுத்த புயலை கிளப்பியுள்ளது. புத்தாண்டையொட்டி, ஆர்யன் கான் தன் குடும்ப உறுப்பினர்களுடன் துபாயில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அந்த பார்ட்டியில் பாகிஸ்தான் நடிகை சாடியா கானும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தை, முதலில் சாடியாதான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது ஆர்யன் கானும் இந்தப் படத்தை வெளியிட்டிருப்பதால், ஷாருக்கான் குடும்பத்தில் அடுத்த புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த சாடியா கான், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours