தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை பாலகிருஷ்ணா ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு ஷேர் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. ஸ்ருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனி ரோஸ் மற்றும் துனியா விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையைமத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சிவியின் ‘வால்டர் வீரய்யா’ படத்துடன் இப்படமும் ரீலிசாக உள்ளது. இந்நிலையில் வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?
தொடக்க காட்சியிலேயே பஞ்ச் வசனங்களுடன் அறிமுகம் கொடுக்கும் பாலகிருஷ்ணா அடுத்து சுத்தியலால் அடித்து எதிரிகளை பறக்க விடுகிறார். தொடர்ந்து ஹேங்கரில் துணிகளை மாட்டிவைப்பது போல எதிரிகளை அடித்து வரவேற்பு பேனர் ஒன்றில் ஒவ்வொருவராக தொங்கவிட்டிருக்கிறார். அணிவகுக்கும் கார்கள், கத்தி, சுத்தியல்,அருவா இடையில் ஷ்ருதி ஹாசனுடன் பாடல், காலியான மைதானத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து எதிரிகளை துவம்சம் செய்வது, ஒரே அடியில் மூன்று பேரை பறக்கவிடுவது என மசாலா நெடி தூக்கலாக வெளியாகியிருக்கிறது இந்தப் படத்தின் ட்ரெய்லர். மொத்ததில் பாலகிருஷ்ணா படங்களின் வழக்கமான டெம்ப்ளேட்களுடன் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours