Actor Vijay Varisu Movie Get 20 Million Real Time Views

Estimated read time 1 min read

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ரியல் டைமில் 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வாரிசு பொங்கல் 

ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக களமிறங்குவதால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய்யின் வாரிசு படத்தையும், அஜித்தின் துணிவு படத்தையும் காண ஆர்வமுடன் உள்ளனர். 

 வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, விடிவி கணேஷ், யோகிபாபு, ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே பாடல்கள் ஹிட்டடித்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே  நேற்று வெளியானது. பக்கா பேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ள இப்படம் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதேசமயம் வாரிசு படத்தின் ட்ரெய்லர் முழுக்க தெலுங்கு படத்தின் சாயல் போன்று இருப்பதாகவும், பார்த்து பார்த்து சலித்த கதையை வம்சி கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் துணிவு படம் 24 மணி நேரத்தில் ரியல் டைமில் 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனைப் படைத்தது. ஆனால் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இதுவரை 21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரம் முடிய இன்னும் 4 மணி நேரமே உள்ள நிலையில் இன்னும் 9 மில்லியன் பார்வைகள் தேவைப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சாதனைப் படைப்பார்களா அல்லது துணிவு படம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours