1/5/2023 2:55:07 PM
சென்னை: பிரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது. சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மலையாள படம், ‘ஜெய ஜெய ஜெய ஹே’. இதை விபின் தாஸ் இயக்கினார். இவர், அடுத்து பிரித்விராஜ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கு ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தத் தலைப்புக்கு குருவாயூர் கோயில் சந்நிதானத்தில் என்பது அர்த்தம். இந்த தலைப்புக்கு கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரதீஷ் விஸ்வநாத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். குருவாயூரப்பன் பெயரில் படம் எடுத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் மிரட்டியுள்ளார்.
குருவாயூரப்பன் இந்துக்களின் கடவுள். பக்தி படத்துக்கு மட்டுமே இதுபோல் தலைப்பு வைக்க வேண்டும். வியாபார படங்களுக்கு இதுபோன்ற தலைப்பை சூட்டக் கூடாது. இந்துமத குருமார்களிடம் கதையை காட்டி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் மலையாள சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours