1/5/2023 1:18:29 PM
திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியான ‘ஆமென்’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ உள்பட பல படங்களை இயக்கியவர், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அவரது இயக்கத்தில் மம்மூட்டி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் புதிய படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைக்கின்றனர்.
சமீபத்தில் கன்னட காமெடி நடிகர் டேனிஷ் சேட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹீரோயினாக மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சோனாலி குல்கர்னி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 1994ல் வீனஸ் பாலு இயக்கிய ‘மே மாதம்’ என்ற தமிழ்ப் படத்தில் வினீத் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை சோனாலி குல்கர்னி. அவரும் மோகன்லாலுடன் நடிப்பவரும் வெவ்வேறு சோனாலி குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours